சுடச்சுட

    

    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: புணே - கோவா இடையிலான ஆட்டம் டிரா

    Published on : 31st October 2015 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    18

    இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியில் புணே - கோவா அணிகளிடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
     இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் கோவாவின் படோர்டாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் எஃப்சி கோவா - எஃப்சி புணே சிட்டி அணிகள் மோதின. இதில் ஆட்டத்தின் 5-ஆவது நிமிடத்திலேயே கோவா அணிக்கு கோல் முயற்சி கைகூடியது. அந்த அணியின் மண்டர் ராவ் தேசாய் அடித்த பந்து இலக்கை விட்டு விலகிச் சென்றது.
     இதேபோல எஃப்சி புணே சிட்டி தனது முதல் வாய்ப்புக்காக 36-ஆவது நிமிடம் வரை காத்திருக்க நேர்ந்தது. அப்போது அந்த அணி வீரர் உசி அடித்த பந்தை எதிரணியின் கோல் கீப்பர் தடுத்தார்.
     அதன் பின்னர் தொடர்ந்து நடைபெற்ற முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்த 3 நிமிடங்களிலேயே புணே அணி சுய கோலுக்கு இடமளித்தது. இதனால் எஃப்சி கோவா முன்னிலை பெற்றது. அதன் பிறகு, 64-ஆவது நிமிடத்தில் லிங்டாஹ் ஒரு கோல் அடிக்க, புணே அணி சமநிலைப் பெற்றது. இதன் பின்னர் நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிட்டவில்லை. முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் இந்த ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இந்த ஆட்டத்துடன் 7 போட்டிகளில் விளையாடியுள்ள புணே அணி, 4 வெற்றி, ஒரு டிரா, 2 தோல்விகளுடன் 13 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. கோவா அணி, 3 வெற்றி, 2 டிரா, 2 தோல்விகளுடன் 11 புள்ளுகளுடன் 3-ஆவது இடத்தில் உள்ளது.
    இன்றைய ஆட்டம்
     கேரள பிளாஸ்டர்ஸ் எஃப்சி
     - சென்னையின் எஃப்சி
     நேரம் : இரவு 7 மணி
     இடம்: கொச்சி.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai