சுடச்சுட

    
    17

    சர்வதேச பாட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் சாய் பிரணீத் தோல்வியைத் தழுவினார்.
     பிட்பர்கர் சர்வதேச பாட்மிண்டன் போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றான 3-ஆவது சுற்றில், போட்டித் தரவரிசையில் 16-ஆவது இடத்திலுள்ள இந்தியாவின் சாய் பிரணீத், போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்திலுள்ள பிரிட்டனின் ராஜீவ் ஒளசெப்பை எதிர்கொண்டார்.
     சுமார் 50 நிமிடங்கள் நடைபெற்ற இப்போட்டியின் முடிவில், 21-17, 6-21, 18-21 என்ற செட் கணக்கில் சாய் பிரணீத் தோல்வியைத் தழுவினார். முன்னதாக தனது முந்தைய ஆட்டத்தில் அவர், இந்தோனேசியாவின் ஆன்ட்ரே குர்னியாவானை 24-22, 21-17 என்ற செட் கணக்குகளில் வீழ்த்தியிருந்தார்.
     மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜுவாலா கட்டா - அஸ்வினி பொன்னப்பா ஜோடி, நெதர்லாந்தின் சமந்தா பர்னிங் - ஐரிஸ் டாபெல்லிங் ஜோடியிடம் 21-23, 21-13, 24-26 என்ற செட் கணக்குகளில் தோல்வியடைந்தது.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai