துளிகள்...!
By dn | Published on : 31st October 2015 01:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
*புணேவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் பிரிட்டனின் ஜேம்ஸ்வார்டை 7-6 (6) 6-3 என்ற செட் கணக்குகளில் வீழ்த்தினார் இந்தியாவின் யுகி பாம்ப்ரி.
* நியூஸிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பிரிஸ்பேனில் வரும் 5-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணியில் ஜோ பர்ன்ஸ், உஸ்மான் கவாஜா ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
* ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட்டுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
அவருக்குப் பதிலாக லியாம் பிளெங்கெட், கிறிஸ் ஜோர்டான் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது.
* அமெரிக்க கூடைப்பந்து அணியில் முதன் முதலாக இடம் பிடித்த இந்திய வீரர் சத்னம் சிங்கின் குடும்பத்துக்கு மாதம் ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்க இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.