சுடச்சுட

  

  நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி

  By  லாகூர்,  |   Published on : 31st October 2015 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  27

  பாகிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்நாட்டின் கிரிக்கெட் பிரபலங்களான ஷாஹித் அஃப்ரிடி, நடுவர் அலீம் தார் ஆகியோர் நிதியுதவி அளித்து உதவியுள்ளனர்.
   பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் கடந்த 26ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 1,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
   அவர்கள் மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடி ரூ.50 லட்சமும், அந்நாட்டைச் சேர்ந்த ஐசிசி நடுவர் அலீம் தார் ரூ.10 லட்சமும் நிதியுதவி அளித்துள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை மறுகுடியமர்த்துவதற்கு பாகிஸ்தான் நாட்டினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அஃப்ரிடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai