Enable Javscript for better performance
புதுகையில் மாநில அளவிலான சைக்கிள் போட்டிகள் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    புதுகையில் மாநில அளவிலான சைக்கிள் போட்டிகள் தொடக்கம்

    By புதுக்கோட்டை,  |   Published on : 31st October 2015 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    24

    புதுக்கோட்டை மாவட்ட சைக்கிளிங் அசோசியேஷன் சார்பில், 59ஆவது மாநில அளவிலான சைக்கிள் போட்டிகள் லெனாவிலக்கு செந்தூரான் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கின.
     மூன்று நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் 14, 16, 18 வயதுக்குள்பட்டவர்களுக்கு மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என 4 பிரிவுகளாக ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே நடத்தப்படுகிறது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, கோவை, கரூர் உள்பட 18 மாவட்டங்களைச் சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
     போட்டிகளை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தொடக்கி வைத்தார். இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான 4 ஆயிரம் மீட்டர் போட்டியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியசீலன் முதலிடத்தையும், புதுகை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்கண்ணன் இரண்டாமிடத்தையும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் மூன்றாமிடத்தையும் பெற்றனர். 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 800 மீட்டர் போட்டியில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் முதல் இடத்தையும், புதுக்கோட்டையைச் சேர்ந்த விக்னேஷ் இரண்டாமிடத்தையும், நிசாத்அகமது மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
     இதில் செந்தூரான் கல்வி நிறுவனங்களின் தலைவர் வயிரவன், தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியஷன் செயலர் ராதாகிருஷ்ணன், புதுக்கோட்டை மாவட்ட செயலர் அசோகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai