சுடச்சுட

  

  பெண்கள் சாம்பியன்ஷிப் டென்னிஸ்: அரையிறுதியில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி

  By  சிங்கப்பூர்,  |   Published on : 31st October 2015 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  28

  பெண்கள் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி முன்னேறியுள்ளது.
   டபிள்யூ.டி.ஏ இறுதிச் சுற்று என்றழைக்கப்படும் பெண்கள் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் இரட்டையர் பிரிவில் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள ஜோடிகள் ரெட், ஒயிட் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றனர். ஒவ்வொரு ஜோடியும் தங்களது பிரிவில் உள்ள மற்ற ஜோடியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ரவுண்ட் ராபின் என்று அழைக்கப்படும் இந்த சுற்றின் முடிவில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் ஜோடிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
   அதன்படி ரெட் பிரிவில் இடம்பெற்றுள்ள, சர்வதேசத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இந்தியாவின் சானியா மிர்ஸா - மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தங்களது பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்திலுள்ள ஹங்கேரியின் டிமியா பபாஸ் - கிறிஸ்டினா மெலடோனாவிச் (பிரான்ஸ்) ஜோடியை எதிர்கொண்டது.
   அரையிறுதிக்கு முன்னேற்றம்: 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி, 6-4, 7-5 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ரெட் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்த சானியா - ஹிங்கிஸ் ஜோடி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
   மேலும் இந்த வெற்றியின் மூலம் இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற போட்டி ஒன்றில் டிமியா பபாஸ் - கிறிஸ்டினா மெலடோனாவிச் ஜோடியிடம் அடைந்த தோல்விக்கு சானியா - ஹிங்கிஸ் ஜோடி பதிலடி கொடுத்தது.
   தங்களது அரையிறுதி ஆட்டத்தில் சானியா - ஹிங்கிஸ் கூட்டணி, போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்திலுள்ள சீன தைபேயின் சன் ஹா சிங் - சன் யங் ஜன் ஜோடியை எதிர்கொள்கிறது.
   வெற்றிக் கூட்டணி: மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா - கர்லா சௌரஸ் நவரோவா ஜோடி, செக் குடியரசின் ஆன்ட்ரியா ஹலவக்கோவா - லூசி ஹார்டெக்கா ஜோடியுடன் மோதுகிறது.
   சானியா - ஹிங்கிஸ் ஜோடி இந்த ஆண்டில் இரண்டு கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் உள்பட 8 போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வெற்றிக் கூட்டணியாக வலம் வருகிறது. கடந்த ஆண்டில் இப்போட்டியில் ஜிம்பாப்வேயின் காரா பிளாக்குடன் இணைந்து சானியா மிர்ஸா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai