சுடச்சுட

  

  ரவி சாஸ்திரி மீது நடவடிக்கை எடுங்கள்: பிசிசிஐ-க்கு சுதீர் நாயக் கடிதம்

  By  மும்பை,  |   Published on : 31st October 2015 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  23

  ஆடுகள பராமரிப்பு விவகாரத்தில் தன்னை அவமதித்துப் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி வான்கடே மைதானப் பராமரிப்பாளர் சுதீர் நாயக் பிசிசிஐ-க்கு கடிதம் எழுதியுள்ளார்.
   இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 25ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி, 4 விக்கெட் இழப்புக்கு 438 ரன்கள் குவித்தது.
   பின்னர் ஆடிய இந்திய அணி 224 ரன்களில் சுருண்டு தோல்வியைத் தழுவியது. இப்போட்டி முடிந்த பின்னர், இந்திய அணியின் இயக்குநர் ரவிசாஸ்திரி, ஆடுகள பராமரிப்பாளர் சுதிர் நாயக்கிடம் சென்று அவரை வசைபாடியுள்ளார். அதேநேரத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், சுதீர் நாயக்கின் உதவியாளர் ரமேஷ் மகமுன்கரை கண்டித்து பேசியுள்ளார். இந்த விவகாரம் குறித்து சுதிர் நாயக் உடனடியாக மும்பை கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் திலீப் வெங்சர்க்காரிடம் புகார் செய்தார். இந்தப் பிரச்னை பூதாகரமாகியுள்ள நிலையில், ரவி சாஸ்திரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுதீர்நாயக் பிசிசிஐ-க்கு கடிதம் எழுதியுள்ளார்.
   அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
   வான்கடே மைதானத்தில் சர்வதேச போட்டிகள் எப்போது நடந்தாலும் 10 அல்லது 12 நாள்களுக்கு முன்னதாகவே அணி நிர்வாகம் (பிசிசிஐ) ஆடுகளம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து தெரிவித்துவிடும். இந்த முறை எந்த அறிவிப்பும் எங்களுக்கு வரவில்லை. ஆகவே பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தை நாங்கள் அமைத்தோம். போட்டிக்கு 2 நாள்கள் முன்னதாக விக்கெட் விழும்படியான ஆடுகளத்தை அமைக்குமாறு எங்களுக்கு தகவல் வந்தது.
   ஆனால் ஆடுகளம் முழுமையாக தயார் செய்யப்பட்ட பிறகு கடைசி நேரத்தில் என்ன செய்ய முடியும்?
   தென் ஆப்பிரிக்காவின் பேட்டிங் முடிந்த பின்னர் ரவி சாஸ்திரி என்னிடம் வந்து, "அருமை சுதீர், நன்றாக விக்கெட்டுகள் விழுந்தன' என்றார்.
   அதற்கு நான் நன்றி கூறினேன். உடனடியாக அவர், என்னை திட்டித் தீர்த்துவிட்டு ஓய்வறைக்கு சென்றுவிட்டார்.
   இதுபோன்ற போக்குகள் பிசிசிஐ-க்கும் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தை பாதித்துவிடும். எனவே, ரவி சாஸ்திரி, பரத் அருண் ஆகியோரை அழைத்து பிசிசிஐ கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று சுதீர் நாயக் குறிப்பிட்டுள்ளார்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai