சுடச்சுட

  

  லோகேஷ் ராகுல், நமன் ஓஜா அரை சதம்: இந்திய லெவன் அணி 296 ரன்கள்

  By  மும்பை,  |   Published on : 31st October 2015 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  19

  தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டியில் லோகேஷ் ராகுல், நமன் ஓஜா ஆகியோர் அரை சதம் அடிக்க, இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணி 296 ரன்கள் எடுத்தது.
   இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி மொஹாலியில் வரும் 5ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணியுடன் 2 நாள்கள் கொண்ட பயிற்சி கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடுகிறது. மும்பை பிராபோர்ன் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய லெவன் அணி முதலில் பேட்டிங் செய்தது.
   ராகுல், ஓஜா அரை சதம்: உன்முக்த் சந்த் (4 ரன்கள்), கேப்டன் சேதேஸ்வர் புஜாரா (5), ஸ்ரேயஸ் ஐயர் (9) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்து அணியை தடுமாற்றத்துக்குள்ளாக்கினர். பின்னர் களமிறங்கிய கருண் நாயர், தொடக்க வீரர் லோகேஷ் ராகுலுடன் இணைந்து விக்கெட் சரிவை தடுத்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் கருண் நாயர் 44 ரன்களுக்கும், லோகேஷ் ராகுல் 72 ரன்களும் எடுத்து வெளியேறினர். பின்னர் வந்தவர்களில் நமன் ஓஜா (52), ஹார்திக் பாண்ட்யா (47) ஆகியோர் மட்டுமே சிறப்பாக விளையாடினர். 78.5 ஓவர்களில் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்கள் எடுத்தது.
   தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக டேல் ஸ்டெயின், சைமன் ஹார்மர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் பின்னர் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் ஸ்டியான் வான் ஜைல் 18 ரன்களிலும், ஹார்மர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் அந்த அணி, 8.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்துள்ளது.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai