Enable Javscript for better performance
ஹர்பஜன் திருமணத்தில் செய்தியாளர்கள் மீது தாக்குதல்: பாதுகாவலர்கள் 4 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஹர்பஜன் திருமணத்தில் செய்தியாளர்கள் மீது தாக்குதல்: பாதுகாவலர்கள் 4 பேர் கைது

    By  ஜலந்தர்,  |   Published on : 31st October 2015 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கின் திருமண நிகழ்ச்சியைப் படம் பிடித்த செய்தியாளர்களைத் தாக்கியதாக பாதுகாவலர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
     இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கும், பாலிவுட் நடிகை கீதா பாஸ்ராவுக்கும் பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள குருத்துவாராவில் வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. இதையொட்டி, ஹர்பஜன் சிங்கின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை, படம் பிடித்துக் கொண்டிருந்த செய்தியாளர்கள் மீது அவரது பாதுகாவலர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதாகவும், கேமராக்களைப் பறித்ததாகவும் கூறப்படுகிறது.
     அதையடுத்து, இல்லத்தின் வெளியே செய்தியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர், ஹர்பஜன் சிங் விரைந்து வந்து செய்தியாளர்களை சமாதானப்படுத்தினார்.
     நடந்த சம்பவத்துக்காக அவர் மன்னிப்பு கேட்டார்.
     இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பாதுகாவலர்களான பாபுல், குல்தீப், ரவி, நவ்ஜோத் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். தனது திருமண நிகழ்வுகளை, படம் பிடிக்கும் உரிமையை ஒரு தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு ஹர்பஜன் சிங் வழங்கியிருந்ததாகவும், இதன் காரணமாகவே இதர செய்தியாளர்களின் கேமராக்களை அவரது பாதுகாவலர்கள் பறித்ததாகவும் கூறப்படுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai