சுடச்சுட

  

  இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணிக்கும், தென் ஆப்பிரிக்க அணிக்கும் இடையிலான 2 நாள் பயிற்சி கிரிக்கெட் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

  இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, 3 டி-20, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 4 டெஸ்ட் போட்டி கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி-20 மற்றும் ஒரு நாள் தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

  இதையடுத்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி மொஹாலியில் வரும் 5-ம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணியுடன் 2 நாள் கொண்ட பயிற்சி கிரிக்கெட் போட்டி மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

  டாஸ் வென்ற இந்திய லெவன் அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்து, 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேஎல் ராகுல் அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்காவின் தரப்பில் ஸ்டெயின் 3 விக்கெட்டுகள் எடுத்தார். பிறகு ஆடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்தது.

  இன்று தென் ஆப்பிரிக்க அணி 302 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டிவில்லியர்ஸ் 112 ரன்கள் எடுத்தார். இந்தியத் தரப்பில் எஸ்என் தாக்கூர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிறகு ஆடிய இந்திய லெவன் அணி, 30 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்தது. இறுதியில் ஆட்டம் டிரா ஆனது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai