Enable Javscript for better performance
‘அடிப்பதை\\\' காட்டிலும் ‘நடிப்பது\\\' கடினம்: சச்சின் டெண்டுல்கர்- Dinamani

சுடச்சுட

    

    ‘அடிப்பதை' காட்டிலும் ‘நடிப்பது' கடினம்: சச்சின் டெண்டுல்கர்

    By  மும்பை,  |   Published on : 15th April 2016 10:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    32

    ஆடுகளத்தில் நின்று பவுலர்களின் பந்துவீச்சை எதிர்கொள்வதைக் காட்டிலும், கேமரா முன்பாக நின்று நடிப்பது கடினமாக உள்ளது என்று சச்சின் டெண்டுல்கர் கூறினார்.
     இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்க்கை படமாக்கப்படுகிறது. அதில் சச்சின் டெண்டுல்கர் நடித்துள்ளார். "சச்சின்: ஏ பில்லியன் ட்ரீம்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தை பிரபல பிரிட்டன் இயக்குநர் ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்குகிறார். இப்படத்துக்கான டீஸர் வியாழக்கிழமை வெளியாகி வைரலாகியுள்ளது.
     இந்நிலையில், மும்பையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெற உள்ள அரை மாரத்தான் போட்டிக்கான விளம்பர தூதராக சச்சின் நியமிக்கப்பட்டுள்ளார். அதுதொடர்பான நிகழ்ச்சியில் அவர் தனது நடிப்பு அனுபவம் குறித்து கூறியதாவது:
     கடந்த பல ஆண்டுகளாக நான் என்ன விரும்புகிறேனோ, அதையே செய்தேன். கேமராக்கள் அதை படம்பிடித்தன. ஆனால், இப்போது கேமரா முன்பு நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டு, அதை நான் செய்யும்போது கேமராவில் படம் பிடிக்கப்படுகிறது. இது எனக்குச் சற்று வித்தியாசமாக உள்ளது. உண்மையில், களத்தில் நின்று வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிப்பேன். ஆனால், கேமரா முன்பாக நின்று நடிப்பது எனக்கு கடினம்.
     நடிப்பு என்பதை நான் கனவிலும் நினைத்ததில்லை. சந்தேகத்திற்கு இடமின்றி கூறுவேன்; கிரிக்கெட்டை விட நடிப்பது கடினம். என்னைப் பொறுத்த வரையில் கிரிக்கெட் விளையாடுவதே எனக்கு எளிதானது.
     மும்பை அரை மாரத்தானில் பங்கேற்போருக்கு எனது வாழ்த்துக்கள். மாரத்தானில் ஒவ்வொரு நொடியும் முக்கியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொண்டால், அதன் பலன் நிச்சயமாக நல்லதாகவே இருக்கும் என்று சச்சின் கூறினார்.
     இதனிடையே, தோனி, அஸாருதீன் ஆகியோரது கிரிக்கெட் வாழ்க்கையும் படமாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai