Enable Javscript for better performance
அமித் மிஸ்ரா சுழலில் 111 ரன்களில் சுருண்டது பஞ்சாப்- Dinamani

சுடச்சுட

    
    IPL Amith Mishra

    புது தில்லி: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் தில்லிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. தில்லி அணியின் அமித் மிஸ்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    தில்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தில்லி டேர்டெவில்ஸ் கேப்டன் ஜாகிர் கான் பவுலிங்கை தேர்வு செய்தார்.

    பஞ்சாப் அணி சார்பில் வோராவும், முரளி விஜய்யும் ஆட்டத்தை தொடங்கினர். பவன் நெகி வீசிய இரண்டாவது ஓவரில், வோரா தூக்கி அடித்த பந்தை தவறவிட்டார் ஜாகிர் கான். அப்போது மூன்றாவது ரன்னுக்கு முயற்சித்த முரளி விஜய்யை ரன்-அவுட் செய்து வெளியேற்றினார் தில்லி அணியின் விக்கெட் கீப்பர் டி காக்.

    இதன்பின்னர் பிரத்வொயிட் வீசிய 6-வது ஓவரில் வோரா 3 பவுண்டரிகளை விளாசினார். பவர்-பிளே முடிவில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட்டை இழந்து 37 ரன்கள் எடுத்தது.

    7-வது ஓவரை வீசிய அமித் ஷா முதல் பந்திலேயே ஷான் மார்ஷை வெளியேற்றினார். 16 பந்துகளை சந்தித்த அவர் 13 ரன்களில் எல்பிடபிள்யூ ஆனார்.

    இதன்பின்னர் பஞ்சாப் அணியின் சரிவை தடுக்க முடியவில்லை. வீரர்கள் வருவதும், பெவிலியன் நோக்கி நடையை கட்டுவதுமாக இருந்தனர். ஒருவரும் நிலைத்து விளையாடவில்லை. மிர்ஷா வீசிய 9-வது ஓவரில் கேப்டன் மில்லர், அதிரடி வீரர் மேக்ஸ்வெல் ஆகியோரை வெளியேற்றினார். மில்லர் 9 ரன்களிலும், மேக்ஸ்வெல் கணக்கைத் தொடங்காமலும் பெவிலியன் திரும்பினர்.

    15 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பஞ்சாப் வீரர்கள் அக்ஷர் படேல் 11 ரன்களில், விருத்திமான் சஹா 3 ரன்களிலும், மிச்சல் ஜான்சன் 4 ரன்களிலும் வெளியேறினர்.

    பஞ்சாப் அணியின் பின்கள வீரர்கள் மோஹித் சர்மா (15), சாஹூ (18) ஆகியோர் அதிரடியாக விளையாடியால் பஞ்சாப் அணி 100 ரன்கள் கடந்தது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    தில்லி வீரர் அமித் மிஷ்ரா 3 ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கேப்டன் ஜாகிர் கான் 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் ஒரு மெயிடன் ஓவரும் அடங்கும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai