Enable Javscript for better performance
சிங்கப்பூர் ஓபன்: இந்தியா வெளியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்றிருந்த இந்திய வீரர், வீராங்கனைகள் தங்களது ஆட்டத்தில் தோல்வியடைந்து வெளியேறினர்.
     முன்னதாக, மகளிர் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் சீனாவின் ஹி பிங்ஜியாவை எதிர்கொண்டார் பி.வி.சிந்து.
     இருவருக்கும் இடையே 55 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் 21-11, 14-21, 14-21 என்ற செட் கணக்கில் சிந்து வீழ்ந்தார்.
     இதனிடையே, ஆடவர் இரட்டையர் பிரிவில் தங்களது இரண்டாவது சுற்றில் இந்தோனேஷியாவின் முகமது அஸன்-ஹென்ட்ரா செதியாவன் இணையை எதிர்கொண்ட பிரணவ்-அக்ஷய் ஜோடி 12-21, 12-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்தது.
     அதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரணவ்-சிக்கி ரெட்டி ஜோடி, சீனாவின் ஜு சென்-மா ஜின் இணையுடன் மோதிய 2ஆவது சுற்றில் 33 நிமிட ஆட்டத்தில் 15-21, 19-21 என்ற செட் கணக்கில் தோல்வியைச் சந்தித்தது.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai