Enable Javscript for better performance
டெல்லி-பஞ்சாப் இன்று முதல் வெற்றிக்காக மோதல்- Dinamani

சுடச்சுட

    

    டெல்லி-பஞ்சாப் இன்று முதல் வெற்றிக்காக மோதல்

    By  புது தில்லி,  |   Published on : 15th April 2016 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஐபிஎல் போட்டியில், இந்த சீசனுக்கான தங்களது முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் டெல்லி டேர்டெவில்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் வெள்ளிக்கிழமை மோதுகின்றன.
     இந்த இரு அணிகளுக்கு இடையேயான ஆட்டம் புது தில்லியில் நடைபெறுகிறது. முன்னதாக டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் வீழ்ந்தது. பஞ்சாப் அணி குஜராத்திடம் தோற்றிருந்தது.
     கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணியின் வீரர்களில் பெரும்பாலானோர் ஒற்றை இலக்க ரன்களில் வீழ்ந்தனர். டி20 உலகக் கோப்பை போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிக்கு வழிவகுத்த பிரத்வெயிட்டும் ஒற்றை இலக்க ரன்னில் வீழ்ந்தார். டெல்லி அணி 98 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
     ஆகவே, இந்த ஆட்டத்தில் அந்த அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாட முயற்சிப்பர். பந்துவீச்சில் பஞ்சாப் அணியை தெறிக்கவிட நாதன் கோல்டர்நைல் கிறிஸ் மோரிஸ், அமித் மிஸ்ரா, ஜாகிர் கான் உள்ளிட்டோர் தயாராக உள்ளனர்.
     பஞ்சாப் அணியைப் பொறுத்த வரையில், முந்தைய ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய், மனன் வோரா ஆகியோரின் பங்களிப்பில் 161 ரன்கள் எடுத்தது. எனினும், அதன் பந்துவீச்சாளர்கள் சரியான நேரத்தில் விக்கெட் வீழ்த்தத் தவறியது, தவறாக மாறியது.
     அதனால் ஆரோன் பிஞ்சும், தினேஷ் கார்த்திக்கும் குஜராத்தின் வெற்றிக்கு வழிவகுத்தனர். ஆகவே, மிட்செல் ஜான்சன், மோகித் சர்மா, அக்ஸர் படேல் உள்ளிட்ட பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் பஞ்சாபுக்கு வெற்றிக்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
     போட்டி நேரம்: இரவு 8
     நேரடி ஒளிபரப்பு: சோனி மேக்ஸ்,
     சோனி சிக்ஸ்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai