Enable Javscript for better performance
டேபிள் டென்னிஸ்: ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றனர் கோஷ், மணிகா- Dinamani

சுடச்சுட

    

    டேபிள் டென்னிஸ்: ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றனர் கோஷ், மணிகா

    By  புது தில்லி,  |   Published on : 15th April 2016 01:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    33

    ரியோ டி ஜெனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு, இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் செளம்யஜித் கோஷ், வீராங்கனை மணிகா பத்ரா ஆகியோர் தகுதி பெற்றனர்.
     முன்னதாக, ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய தகுதிச் சுற்றுப் போட்டியில் வென்றதை அடுத்து அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. தெற்காசிய மண்டலத்துக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் வேறு எந்த நாட்டு வீரர் வீராங்கனைகளும் கலந்துகொள்ளாததை அடுத்து, இந்திய வீரர், வீராங்கனைகள் தங்களுக்குள்ளாகவே மோதிக் கொண்டனர்.
     இதில், இந்திய வீரர் செளம்யஜித் கோஷ், சரத் கமலை 11-8, 11-5, 11-6, 11-7 என்ற செட் கணக்கிலும், ஹர்மீத் தேசாயை 11-6, 11-9, 12-10, 10-12, 11-5 என்ற செட் கணக்கிலும், அந்தோணி அமல்ராஜை 11-8, 11-5, 11-6, 11-7 என்ற செட் கணக்கிலும் வீழ்த்தி ஆடவர் பிரிவில் முதலிடம் பிடித்து ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்.
     மகளிர் பிரிவில் மணிகா பத்ரா, ஷாமினியை 4-11, 11-9, 11-3, 15-13, 8-11, 11-9 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில், மெளமா தாûஸ 11-5, 8-11, 8-11, 11-9, 11-6, 11-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்தார். இதில், ஆடவர் பிரிவில் போட்டியிட்ட சரத் கமல், மண்டல அளவிலான தகுதிச் சுற்றுகள் முடிந்த பிறகு நடைபெறும் முக்கிய ஆசிய தகுதிச் சுற்றில் பங்கேற்க உள்ளார். அங்கு, இதர மண்டலங்களில் இருந்து தேர்வான வீரர்களுடன் அவர் மோதுவார்.
     அதில் அவர் தோற்கும் பட்சத்திலும், இம்மாதம் தகுதிச் சுற்றுகள் நிறைவடைந்த பிறகு மே முதல் வாரத்தில் இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு வெளியிடும் ஒலிம்பிக் ரேங்கிங்கின் அடிப்படையில் அவர் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai