Enable Javscript for better performance
தரவரிசை: ஸ்ரீகாந்த், ஜெயராம் முன்னேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    பாட்மிண்டன் வீரர்களுக்கான உலக தரவரிசையில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், ஜெயராம் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
     உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலின்படி, ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் 14ஆவது இடத்தில் இருந்து 13ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேபோல், 24ஆவது இடத்தில் இருந்த ஜெயராம் 3 இடங்கள் முன்னேறி 21ஆவது இடத்துக்கு வந்துள்ளார். எனினும், சுவிஸ் ஓபனில் வெற்றி பெற்ற இந்திய வீரர் ஹெச்.எஸ்.பிரணாய், 22ஆவது இடத்தில் இருந்து 23ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். காமன்வெல்த் போட்டி சாம்பியனான காஷ்யப் 18ஆவது இடத்தில் இருந்து 20ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
     மகளிர் ஒற்றையர் பிரிவில், சாய்னா நேவால் 8ஆவது இடத்திலும், பி.வி.சிந்து 10ஆவது இடத்திலும் தொடருகின்றனர்.
     ஆடவர் இரட்டையர் பிரிவில், மனு அத்ரி-சுமித் ரெட்டி இணை 19ஆவது இடத்தில் இருந்து 20ஆவது இடத்துக்குச் சென்றுள்ளது. மகளிர் இரட்டையர் பிரிவில், ஜுவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி 15ஆவது இடத்திலேயே நீடிக்கிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai