Enable Javscript for better performance
துளிகள்...- Dinamani

சுடச்சுட

    

    * வறட்சி நிலவும் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து ஐபிஎல் போட்டிகளை இடமாற்றம் செய்ய பிசிசிஐக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இடமாற்றம் செய்யும் 2 பிளேஆஃப் ஆட்டங்களை தில்லியில் நடத்த தில்லி கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.
     வு ஐபிஎல் ஆட்டங்களை இடமாற்றம் செய்வது குறித்து மும்பை இந்தியன்ஸ், ரைஸிங் புணே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளின் பிரதிநிதிகளுடன் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா வெள்ளிக்கிழமை புது தில்லியில் கலந்தாலோசிக்கிறார். இந்த இரு அணிகளுக்கான ஆட்டம் இடமாற்றம் ஆவது குறிப்பிடத்தக்கது.
    * மங்கோலியாவில் நிறைவடைந்த 12 வயதுக்கு உள்பட்டோருக்கான, ஆசிய இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 3 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதில், ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் வென்ற தங்கமும் அடங்கும்.
    *மொனாக்கோவில் நடைபெற்று வரும் மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபன்னா-ருமேனியாவின் ஃப்ளோரின் மெர்ஜியா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
    * அஸ்லான் ஷா ஹாக்கிப் போட்டியில் வெள்ளிக்கிழமை (15ஆம் தேதி) நடைபெறும் மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும்.
     வு பிரேசில் அதிபர் டில்மா ரூஸஃபுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட நாட்டின் அரசியல் சூழ்நிலைகள், ஒலிம்பிக் போட்டிகளை பாதிக்காது என்று போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai