Enable Javscript for better performance
தேசிய பீச் கபடி நாளை தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    8ஆவது தேசிய பீச் கபடி சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சனிக்கிழமை தொடங்குகிறது.
     "ராமகிருஷ்ணா கடற்கரையில் நடைபெறும் இந்தப் போட்டியில் 24 மாநிலங்களைச் சேர்ந்த 46 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 24 ஆடவர் அணிகளும், 22 மகளிர் அணிகளும் அடங்கும்.
     செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசிய பீச் விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணி, இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து தேர்வு செய்யப்படும். ஆந்திர கபடி சங்கத்தால் நடத்தப்படும் இந்தப் போட்டி வரும் 19ஆம் தேதி வரை நடைபெறும்' என்று ஆந்திர கபடி சங்கத்தின் செயலர் வீரலங்கையா கூறினார்.
     அத்துடன், இந்த சாம்பியன்ஷிப் போட்டியின் நிறைவு விழாவில் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai