Enable Javscript for better performance
மகளிர் உலக சாம்பியன்ஷிப் தூதராக மேரி கோம் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    மகளிர் உலக சாம்பியன்ஷிப் தூதராக மேரி கோம் நியமனம்

    By  புது தில்லி,  |   Published on : 15th April 2016 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    34

    மகளிர் குத்துச் சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான 8 தூதர்களில் ஒருவராக இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் நியமிக்கப்பட்டுள்ளார்.
     சர்வதேச குத்துச் சண்டை சங்கத்தால் (ஏஐபிஏ) தூதராக நியமிக்கப்பட்டுள்ளது தனக்கு மிகப்பெரிய கெளரவம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 5 முறை தங்கம் வென்றுள்ள மேரி கோம், கடந்த 2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கஜகஸ்தானின் அஸ்டானா நகரில் மே 19 முதல் 27ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ள மகளிர் குத்துச் சண்டை உலக சாம்பியன்ஷிப்பில் மேரி கோம் பங்கேற்கிறார். இதில் அவர் வெற்றி பெறும் பட்சத்தில் இந்த ஆண்டு ரியோ நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதி பெறுவார்.
     இதற்கு முன்பாக, கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய தகுதிச்சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்து தனக்கான ஒலிம்பிக் வாய்ப்புகளில் ஒன்றை அவர் தவற விட்டது குறிப்பிடத்தக்கது. மேரி கோம் தவிர, பிரிட்டனின் நிகோலா ஆடம்ஸ், அமெரிக்காவின் மர்லேன் எஸ்பார்ஸா, பிரேஸிலின் அட்ரியானா அரெளஜா, பல்கேரியாவின் ஸ்டானிமிரா பெட்ரோவா, மொராக்கோவின் காதிஜா மார்டி, அல்ஜீரியாவின் கெய்ரா சிக்கி யாகுப், கனடாவின் ஜெனிஃபர் ஹக்கின்ஸ் ஆகியோர் மகளிர் குத்துச் சண்டை உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai