சுடச்சுட

  
  samy

  போட்டிகளுக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து டேரன் சமி (32) நீக்கப்பட்டுள்ளார்.

  சமி தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி, கடந்த 2012 மற்றும் 2016-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.

  இதுகுறித்து, தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள விடியோ பதிவில் சமி கூறியுள்ளதாவது:

  ஆறு ஆண்டுகளாக நான் வகித்து வந்த கேப்டன் பொறுப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தேர்வுக் குழுத் தலைவர், வெள்ளிக்கிழமை என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

  டி20 அணியின் கேப்டன் பொறுப்பு குறித்து தேர்வுக் குழு ஆராய்வதாகத் தெரிவித்த அவர், எனது செயல்பாடுகள் தேர்வுக் குழுவை திருப்தியடையச் செய்யும் வகையில் இல்லை எனக் கூறினார். மேலும், நான் கேப்டன் பொறுப்பில் தொடர்ந்து நீடிக்க இயலாது எனவும் தெரிவித்தார் என்று டேரன் சமி அதில் கூறியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai