Enable Javscript for better performance
ஆடவர் இரட்டையர் டென்னிஸ் இறுதிச்சுற்றில் நடால் ஜோடி- Dinamani

சுடச்சுட

    

    ஆடவர் இரட்டையர் டென்னிஸ் இறுதிச்சுற்றில் நடால் ஜோடி

    By மதி  |   Published on : 13th August 2016 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    nadal

    ஆடவர் இரட்டையர் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், மார்க் லோபஸ் ஜோடி.

    ரியோ ஒலிம்பிக் ஆடவர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால்-மார்க் லோபஸ் ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    இந்த ஜோடி தங்களின் அரையிறுதியில் 7-6 (1), 7-6 (4) என்ற நேர் செட்களில் கனடாவின் டேனியல் நெஸ்டர்-வசக் போஸ்பிஸில் ஜோடியைத் தோற்கடித்தது.

    காலிறுதியில் நடால்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஃபேல் நடால் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அவர் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 7-6 (5), 6-3 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ஜில்ஸ் சைமனை தோற்கடித்தார். இதுவரை சைமனுடன் 9 முறை மோதியுள்ள நடால், 8-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளார்.

    நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான பிரிட்டனின் ஆன்டி முர்ரே 6-1, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    அரையிறுதியில் கெர்பர்: மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர், செக்.குடியரசின் பெட்ரா விட்டோவா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

    கெர்பர் தனது காலிறுதியில் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் பிரிட்டனின் ஜோஹன்னா கொன்டாவையும், விட்டோவா தனது காலிறுதியில் 6-2, 6-0 என்ற நேர் செட்களில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவையும் தோற்கடித்தனர்.

    நடால்-முகுருஸா ஜோடி விலகல்:

    ரியோ ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டியிலிருந்து ஸ்பெயினின் ரஃபேல் நடால், கார்பைன் முகுருஸா ஜோடி விலகியது.

    நடால்-முகுருஸா ஜோடி தங்களின் முதல் சுற்றில் செக்.குடியரசின் லூஸி ரடேக்கா-ரடேக் ஸ்டெபானெக் ஜோடியுடன் மோதவிருந்த நிலையில், ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக திடீரென விலகியது. ஆனால் விலகியதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் சானியா-போபண்ணா ஜோடி

    ரியோ ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா-ரோஹன் போபண்ணா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    இந்த ஜோடி தங்களின் முதல் சுற்றில் 7-5, 6-4 என்ற நேர் செட்களிஸ் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர்-ஜான் பியர்ஸ் ஜோடியைத் தோற்கடித்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai