Enable Javscript for better performance
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: மே.இ.தீவுகள்-194/3- Dinamani

சுடச்சுட

    

    இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது நாளில் மதிய உணவு இடைவேளையின்போது 83 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்திருந்தது மேற்கிந்தியத் தீவுகள்.
    மேற்கிந்தியத் தீவுகளின் கிராஸ் ஐஸ்லெட்டில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 129.4 ஓவர்களில் 353 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் அஸ்வின் 118 ரன்களும், விருத்திமான் சாஹா 104 ரன்களும் குவித்தனர்.
    மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜோசப், கம்மின்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
    மே.இ.தீவுகள்-194/3: பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 47 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. கிரேக் பிரத்வெயிட் 53, டேரன் பிராவோ 18 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
    இந்த நிலையில் 3-ஆவது நாளில் பெய்த கனமழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது. 4-ஆவது நாளான வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் பிரத்வெயிட் 64, டேரன் பிரவோ 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
    மதிய உணவு இடைவேளையின்போது மேற்கிந்தியத் தீவுகள் அணி 83 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்திருந்தது. சாமுவேல்ஸ் 39, பிளாக்வுட் 20 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai