Enable Javscript for better performance
4-ஆவது டெஸ்ட்: பாகிஸ்தான்-196/3- Dinamani

சுடச்சுட

    

    இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது நாளில் தேநீர் இடைவேளையின்போது பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 57 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்திருந்தது.
    லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 76.4 ஓவர்களில் 328 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மொயீன் அலி 108, ஜானி பேர்ஸ்டோவ் 55 ரன்கள் எடுத்தனர்.
    பாகிஸ்தான் தரப்பில் சோஹைல் கான் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
    பாகிஸ்தான்-196/3: பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய பாகிஸ்தான் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 3 ரன்கள் எடுத்திருந்தது.
    2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணியில் யாசிர் ஷா 26 ரன்களில் நடையைக் கட்ட, அசார் அலி 49 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஆசாத் ஷபிக்குடன் இணைந்தார் யூனிஸ்கான். தேநீர் இடைவேளையின்போது பாகிஸ்தான் 57 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்திருந்தது. ஆசாத் ஷபிக் 79, யூனிஸ்கான் 26 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai