Enable Javscript for better performance
உத்தப்பா (70) அதிரடியில் கொல்கத்தா 164 ரன்கள் குவிப்பு- Dinamani

சுடச்சுட

    
    IPL Robin

    கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் முரளி விஜய் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

    இதையடுத்து பேட் செய்த கொல்கத்தா அணிக்கு உத்தப்பா-கேப்டன் கெüதம் கம்பீர் ஜோடி சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. மோஹித் சர்மா, ஸ்டாய்னிஸ் ஆகியோர் வீசிய 2 மற்றும் 3-ஆவது ஓவர்களில் தலா இரு பவுண்டரிகளை விரட்டி அதிரடியில் இறங்கினார் கம்பீர். இதன்பிறகு கம்பீர்-உத்தப்பா ஜோடி சற்று நிதானம் காட்ட, 5 ஓவர்களில் 32 ரன்கள் மட்டுமே எடுத்தது கொல்கத்தா.

    எனினும் பின்னர் சற்று வேகம் காட்ட, கொல்கத்தாவின் ஸ்கோர் உயர ஆரம்பித்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய கம்பீர், மேக்ஸ்வெல் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து அரை சதம் கண்டார். கொல்கத்தா 13.3 ஓவர்களில் 101 ரன்கள் எடுத்திருந்தபோது கம்பீர் ரன் அவுட்டானார். அவர் 45 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து யூசுப் பதான் களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய உத்தப்பா 38 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். கொல்கத்தா அணி 137 ரன்களை எட்டியபோது ராபின் உத்தப்பா ரன் அவுட்டானார். அவர் 49 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து பதானுடன் இணைந்தார் ஆன்ட்ரே ரஸல். கடைசிக் கட்டத்தில் இந்த ஜோடி சற்று வேகம் காட்ட, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது கொல்கத்தா. கடைசிப் பந்தில் ரஸல் ரன் அவுட்டானார். அவர் 10 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 16 ரன்கள் எடுத்தார். யூசுப் பதான் 16 பந்துகளில் 1 சிக்ஸருடன் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai