Enable Javscript for better performance
ஐ.பி.எல்.லில் களமிறங்குகிறார் ஹசிம் ஆம்லா- Dinamani

சுடச்சுட

    
    hamla

    புது தில்லி: ஐ.பி.எல் போட்டியில் முதல்முறையாக களமிறங்குகிறார் தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர் ஹசிம் ஆம்லா.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்த ஷான் மார்ஷ் காயம் காரணமாக விலகினார். இதையடுத்து அவருக்குப் பதிலாக ஆம்லாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது பஞ்சாப். இந்த சீசனின் எஞ்சிய ஆட்டங்களில் பஞ்சாப் அணிக்காக அவர் ஆடுகிறார்.

    இதை டுவிட்டரில் உறுதி செய்துள்ள ஆம்லா, "ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடுவதற்காக மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார். கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் மார்ஷுக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

    இந்த சீசனில் இதுவரை 4 ஆஸ்திரேலியர்கள் காயம் காரணமாக விலகியுள்ளனர். முன்னதாக ஜான் ஹேஸ்டிங்ஸ், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் விலகியது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai