Enable Javscript for better performance
புணேக்கு எதிரான ஆட்டத்தில் டக்வொர்த்-லீவிஸ் விதிப்படி கொல்கத்தா வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    புணேக்கு எதிரான ஆட்டத்தில் டக்வொர்த்-லீவிஸ் விதிப்படி கொல்கத்தா வெற்றி

    By DN  |   Published on : 15th May 2016 02:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    IPL Pathan

    கொல்கத்தா: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 45 ஆவது லீக் ஆட்டத்தில் டக்வொர்த்-லீவிஸ் விதிப்படி 8 விக்கெட் வித்தியாசத்தில் ரைஸிங் புணே சூப்பர் ஜயன்ட்ஸ் அணியைத் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

    இதன் மூலம் 7-வது வெற்றியைப் பெற்ற கொல்கத்தா, 14 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியு்ளது. புணே அணி 9 ஆவது தோல்வியை சந்தித்துள்ளது.

    கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த புணே அணியில் ரஹானே 2 ரன்களிலும், உஸ்மான் கவாஜா 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த திவாரி 13, ஜார்ஜ் பெய்லி 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    இதன்பிறகு களமிறங்கிய இர்ஃபான் பதான் 7 ரன்களில் ரன் அவுட்டாக, திசாரா பெரேரா 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கேப்டன் தோனியுடன் இணைந்தார் அஸ்வின். புணே அணி 17.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தோனி 8 ரன்களுடனும், அஸ்வின் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர்.

    கொல்கத்தா அணியின் சாவ்லா 4 ஓவர்களில் 21 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    மழை நின்றதைத் தொடர்ந்து ஆட்டம் தொடங்கிய போது கொல்கத்தா அணி டக்வொர்த்-லீவிஸ் விதிப்படி 9 ஓவர்களில் 66 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய முதல் ஓவரிலேயே உத்தப்பா (4 ரன்கள்), கேப்டன் கம்பீர் (0) பெவிலியன் திரும்பிய நிலையில், மனீஷ் பாண்டேவுடன் இணைந்தார் யூசுப் பதான்.

    ஆட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும் என நினைத்த பதான், வெளுத்து வாங்கினார். அவர் 18 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்தார். பாண்டே 10 பந்துகளில் 15 ரன்களில் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா அணி 5 ஓவர்களிலேயே 66 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    புணே தரப்பில் ஆர்.அஸ்வின் 2 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். யூசுப் பதான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai