Enable Javscript for better performance
கரோலினாவை வீழ்த்தி இந்திய ஒபனை வென்றார் பி.வி. சிந்து- Dinamani

சுடச்சுட

    
    sindhu

    புதுதில்லி: இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டிகள் இன்று தில்லியில் நடைபெற்றது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 5-ம் நிலை வீராங்கனையான பி.வி. சிந்து மூன்றாம் நிலை வீராங்கனையான ஸ்பெயின் நாட்டின் கரோலியான மரினை எதிர்கொண்டார்.

    ஏற்கெனவே, இவர்கள் இருவரும் மோதிய ரியோ ஒலிம்பிக் இறுதிப்போட்டி க்ளாசிக் போட்டியாக இருந்ததால், இந்தப் போட்டியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

    ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே இருந்தே பி.வி. சிந்து 7-5, 10-8 என முன்னிலைப் பெற்றார். ஒரு கட்டத்தில் ஆட்டம் 15-15 என சமநிலை அடைந்தது. பின்னர் 19-18 என கரோலினா முன்னிலைப் பெற்றார்.

    அதன்பிறகு தொடர்ந்து மூன்று புள்ளிகளைப் பெற்று சிந்து 21-19 என முதல் செட்டை கைப்பற்றினார்.

    2-வது செட்டில் 5-2 என முன்னிலைப் பெற்றிருந்த சிந்து, அதன்பின் 9-7 என முன்னிலைப் பெற்றார். பின்னர் சிறப்பாக விளையாடியதன் மூலமாக 21-16 என்ற நேர் செட் கணக்கில் கரோலியான மரினை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் சிந்து.

    இதன் மூலம் ரியோ ஒலிம்பிக் தோல்விக்கு கரோலியான மரினை வீழ்த்தி பதிலடி கொடுத்துள்ளார் சிந்து.

    அதேபோல், ஆடவர் பிரிவில் டென்மார்க் வீரர் அக்சல்சன் சாம்பியன் பட்டம் வென்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai