Enable Javscript for better performance
சின்னனத்தை தவறாக பயன்படுத்தவில்லை: மதுசூதனன் விளக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சின்னத்தை தவறாக பயன்படுத்தவில்லை: மதுசூதனன் விளக்கம்

    By DIN  |   Published on : 03rd April 2017 10:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mathusudhanan_2

    சென்னை : இரட்டை மின்கம்பம் சின்னத்தை தான் தவறாக பயன்படுத்தவில்லை என தேர்தல் ஆணையத்துக்கு எழுதி உள்ள கடிதத்தில் மதுசூதனன் விளக்கம் அளித்துள்ளார்.

    ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில், பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சிதலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனனும், அதிமுக அம்மா அணி சார்பில் டிடிவி தினகரனும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    அதிமுகவின் இரு பிரிவினரும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமைகோரியதால் அச்சின்னத்தையும், அதிமுக என்ற பெயரையும் முடக்கிய தேர்தல் ஆணையம், ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட இரு அணிகளுக்கும் தனித்தனியாக சின்னங்களை ஒதுக்கியது.

    இதையடுத்து பன்னீர்செல்வம் அணியினருக்கு ஒதுக்கப்பட்ட இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்தை, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துடன் ஒப்பிட்டு வாக்காளர்களை குழப்பி வருவதாக தேர்தல் ஆணையத்திடம் டிடிவி தினகரன் தலைமையிலான அதிமுக அம்மா அணி அளித்த புகாரின் பேரில் பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணிக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

    அதில், "இந்த விவகாரத்தில் உங்கள் தரப்பு மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து வரும் இன்று திங்கள்கிழமைக்குள் விளக்கமளிக்க வேண்டும்' என்று கூறியிருந்தது.

    அதன்படி, விளக்கம் அளித்து மதுசூதனன் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், இரட்டை மின்கம்பம் சின்னத்தை நான் தவறாக பயன்படுத்தவில்லை. தினகரன் தான் தனது பிரசாரத்தின் போது இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக கட்சியின் பெயரையும் தவறாக பயன்படுத்தி வருகிறார் என குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai