'நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு'- 'தல' தோனியின் 'மெர்சல்' ஃபர்ஸ்ட் லுக்...!

சூதாட்ட வழக்கில் விதிக்கப்பட்டிருந்த தடைக்காலம் முடந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரும்பியதை கொண்டாடும் விதமாக 'தல' தோனி 'மெர்சல்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டை பதிவிட்டார்.
'நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு'- 'தல' தோனியின் 'மெர்சல்' ஃபர்ஸ்ட் லுக்...!

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்டிருந்த 2 ஆண்டுகள் தடை வியாழக்கிழமையோடு முடிவுக்கு வந்தது. இதனால் உலகம்முழுவதும் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் புதிய உத்திகளுடன் வரும் ஐபிஎல் சீசனில் களமிறங்கப்போவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும் தெரிவித்துள்ளது.

அதுபோல, தடைக்காலம் முடிந்து ஐ.பி.எல் போட்டிகளுக்கு திரும்பும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்திய கிரிக்கெட் வாரியமும் (பிசிசிஐ) மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி, தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டார். அது தற்போதுசமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அந்தப் புகைப்படத்தில், 'தல' என்ற பெயருடன் தனது '7'-வது நம்பர் சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெர்ஸியுடன் தோனி, தனது வீட்டின் வெளியே நிற்கிறார். அவரது செல்ல நாய் எழுந்து நின்று வணக்கம் வைக்கிறது.

இந்தப் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி பதிவிட்டார். அதற்கான கேப்ஷனை ரசிகர்களிடத்திலேயே விட்டு விடுவதாக தெரிவித்தார்.

சில மணி நேரங்களிலேயே இது பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தோனி மற்றும் சி.எஸ்.கே ரசிகர்களுக்கு இது விருந்தாக அமைந்தது.

முன்னதாக, 8 சீசன்களுக்கு சென்னை அணியின் கேப்டனாக இருந்த தோனி, 2 முறை ஐ.பி.எல், 2 முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளை பெற்றுத்தந்துள்ளார்.

இதையடுத்து சூப்பர் கிங்ஸ் தடை காரணமாக கடந்த 2 சீசன்களாக (9,10) ரைஸிங் புணே சூப்பர்ஜெயின்ட் அணிக்கு விளையாடினார்.

இதன் முதல் சீசனில் புணே அணி கடைசி இடத்தை மட்டுமே பிடித்தது. இதனால் அடுத்த சீசனில் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி நீக்கப்பட்டார். ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இருந்தாலும், தோனியின் வழிகாட்டுதலை நாடிய ஸ்மித், அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச்சென்றார்.

9-ஆவது சீசனின் துவக்கத்தின் போது, சூப்பர் கிங்ஸ் அணியையும், சென்னை ரசிகர்களையும் தன்னால் மறக்க முடியாது என்றும், சென்னை தனது இரண்டாவது வீடு என்றும் தோனி கூறியது நினைவிருக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com