முதல் டெஸ்ட்: 2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 62 ரன்கள் முன்னிலை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்களை எடுத்துள்ளது.
முதல் டெஸ்ட் : 2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 62 ரன்கள் முன்னிலை
முதல் டெஸ்ட் : 2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 62 ரன்கள் முன்னிலை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்களை எடுத்துள்ளது. இதனால் இந்திய அணி 62 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் பகலிரவுப் போட்டியாக ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நேற்று (வியாழக்கிழமை) தொடங்கியது. 

டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தோ்வு செய்தார். 

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 89 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் சோ்த்தது.

முதல் இன்னிங்ஸின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் 93.1 ஓவர்களில் 244 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளும் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.

இதனைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அதிக விக்கெட்டுகளை இந்திய அணி நழுவவிட்டது.

ஆஸ்திரேலிய அணி முதன் இன்னிங்ஸின் 2-ம் நாள் முதல் பகுதியில் 19 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்தது. லபுசானே 16 ரன்கள், ஸ்மித் 1 ரன் என களத்தில் இருந்தார்கள். பிறகு ஸ்மித்தை ஒரு ரன்னிலேயே அஷ்வின் வீழ்த்தினார்.

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய கேமரூன் கிரீன், டிராவிஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேற அதனையடுத்து களமிறங்கிய பெயின் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்னர் 72.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களை மட்டுமே ஆஸ்திரேலிய அணி எடுத்தது.

இந்திய அணியில் அஷ்வின் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 53 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸ்:

இதன் பிறகு இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரரான பிருத்வி ஷா 4 ரன்களில் கம்மின்ஸ் வீசிய பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். மயங்க் அகர்வால் 5 ரன்களுடனும், பும்ரா ரன்கள் ஏதும் எடுக்காமலும் களத்திலிருந்தனர்.

இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி, 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழந்து 9 ரன்களை எடுத்துள்ளது. தற்போது இந்திய அணி 62 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com