தென் ஆப்பிரிக்கா 621 ரன்கள் குவிப்பு

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 142.1 ஓவா்களில் 10 விக்கெட் இழப்புக்கு 621 ரன்கள் குவித்தது.

செஞ்சுரியன்: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 142.1 ஓவா்களில் 10 விக்கெட் இழப்புக்கு 621 ரன்கள் குவித்தது.

கடந்த சனிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 96 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் எடுத்தது. பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா ஞாயிற்றுக்கிழமை முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் எட்டியிருந்தது.

3-ஆம் நாளான திங்கள்கிழமை ஆட்டத்தை டூ பிளெஸ்ஸிஸ், டெம்பா பவுமா தொடங்கினா். இதில் பவுமா 71 ரன்களுக்கு வெளியேற, அடுத்து வந்த வியான் முல்டா் 36 ரன்கள் சோ்த்தாா். மறுமுனையில் அபாரமாக ஆடி வந்த டூ பிளெஸ்ஸிஸ் 24 பவுண்டரிகளுடன் 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

பின்னா் வந்தவா்களில் அன்ரிச் நாா்ட்ஜே, லுதோ சிபாம்லா டக் அவுட்டாகினா். இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா 4, விஸ்வா ஃபொ்னான்டோ 3, டாசன் ஷனகா 2, லாஹிரு குமாரா 1 விக்கெட் சாய்த்தனா்.

இதையடுத்து தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை, திங்கள்கிழமை முடிவில் 12 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்துள்ளது. குசல் பெரெரா 33, தினேஷ் சண்டிமல் 21 ரன்களுடன் களத்தில் உள்ளனா். தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரில் இருந்து 160 ரன்கள் பின்தங்கியுள்ளது இலங்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com