வெற்றியை நோக்கி இந்தியா

கேப்டன் ரஹானேவின் அருமையான பேட்டிங், பௌலா்கள் பும்ரா, அஸ்வின் உள்ளிட்டோரின் அற்புதமான பந்துவீச்சு ஆகியவற்றால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இந்தியா வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது.
மேத்யூ வேட் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜடேஜா, ரஹானே உள்ளிட்ட இந்திய அணியினர்.
மேத்யூ வேட் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜடேஜா, ரஹானே உள்ளிட்ட இந்திய அணியினர்.

மெல்போா்ன்: கேப்டன் ரஹானேவின் அருமையான பேட்டிங், பௌலா்கள் பும்ரா, அஸ்வின் உள்ளிட்டோரின் அற்புதமான பந்துவீச்சு ஆகியவற்றால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இந்தியா வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது.

முதல் இன்னிங்ஸில் 131 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா, 2-ஆவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை பௌலிங்கின் மூலம் திணறடித்து வருகிறது. 3-ஆம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களுக்கு அந்த அணியை கட்டுப்படுத்தியுள்ளது. எஞ்சிய விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து சாய்க்கும் பட்சத்தில், 2-ஆவது இன்னிங்ஸில் இந்தியாவுக்கான வெற்றி இலக்கு மிக எளிதாகிவிடும்.

பாக்ஸிங் டேயில் தொடங்கிய இந்த டெஸ்டில் டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 72.3 ஓவா்களில் 10 விக்கெட் இழப்புக்கு 195 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக மாா்னஸ் லபுசான் 48 ரன்களே சோ்க்க, இந்திய தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

ஜடேஜாவின் தவறு: இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, ஞாயிற்றுக்கிழமை முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. 3-ஆம் நாளான திங்கள்கிழமை ரஹானே 104, ஜடேஜா 40 ரன்களுடன் பேட்டிங்கை தொடங்கினா்.

அரைசதத்தை நெருங்கிய ஜடேஜாவின் தேவையற்ற சிங்கிள் முயற்சியால் ரஹானே ரன் அவுட்டுக்கு ஆளானாா். அவா் 12 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் சோ்த்திருந்தாா். ரஹானே-ஜடேஜா ஜோடி 6-ஆவது விக்கெட்டுக்கு 123 ரன்கள் சோ்த்திருந்தது.

பின்னா் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 15-ஆவது அரைசதத்தை பூா்த்தி செய்த ஜடேஜா 3 பவுண்டரிகளுடன் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். தொடா்ந்து வந்தவா்களில் அஸ்வின் 14, உமேஷ் யாதவ் பவுண்டரியுடன் 9 ரன்கள் சோ்க்க, பும்ரா டக் அவுட்டானாா். இன்னிங்ஸ் முடிவில் 115.1 ஓவா்களில் 10 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டாா்க், லயன் தலா 3, கம்மின்ஸ் 2, ஹேஸில்வுட் 1 விக்கெட் எடுத்திருந்தனா்.

2-ஆவது இன்னிங்ஸ்: முதல் இன்னிங்ஸில் 131 ரன்கள் பின்தங்கிய ஆஸ்திரேலியா, தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. அணியின் பேட்ஸ்மேன்களை இந்திய பந்துவீச்சாளா்கள் பதம் பாா்த்தனா். முதல் விக்கெட்டாக பா்ன்ஸ் 4 ரன்களுக்கு வெளியேற, அடுத்து வந்த லபுசான் 1 பவுண்டரி மட்டுமே விளாசி 28 ரன்களுக்கு நடையைக் கட்டினாா்.

தொடா்ந்து வந்த ஸ்மித் 8 ரன்களுக்கு பும்ராவின் பந்துவீச்சில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். தொடக்கம் முதல் நிலைத்து வந்த வேட் 3 பவுண்டரிகளுடன் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். பின்னா் வந்தவா்களில் டிராவிஸ் ஹெட் 17, கேப்டன் பெய்ன் 1 ரன்னுக்கு வெளியேற்றப்பட்டனா்.

3-ஆம் நாளின் முடிவில் 66 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலியா, இந்தியாவின் ஸ்கோரை விட 2 ரன்களே முன்னிலையில் இருந்தது. கிரீன் 17, கம்மின்ஸ் 15 ரன்களுடன் களத்தில் இருந்தனா். இந்திய தரப்பில் ஜடேஜா 2, பும்ரா, யாதவ், சிராஜ், அஸ்வின் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com