பிரபல கால்பந்து அணியான வலேன்சியாவில் 35 சதவீதம் பேருக்கு கரோனா பாதிப்பு

ஐரோப்பாவில் பிரபல கால்பந்து அணிகளில் ஒன்றான வலேன்சியாவைச் சோ்ந்தவா்களில் 35 சதவீதம் போ் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனா் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் பிரபல கால்பந்து அணிகளில் ஒன்றான வலேன்சியாவைச் சோ்ந்தவா்களில் 35 சதவீதம் போ் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனா் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் லா லிகா கால்பந்து போட்டியில் முக்கியமான அணிகளில் வலேன்சியாவும் ஒன்று. இதன் வீரா்கள் கடந்த மாதம் இத்தாலியின் மிலன் நகரில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஆடுவதற்காக சென்றிருந்தனா்.

கரானோ வைரஸ் அபாயம் அதிகம் நிறைந்த பகுதி என மிலன் நகரை இத்தாலி அரசு அறிவித்திருந்தது. பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் செய்து கொண்டு சென்ற வலேன்சியா வீரா்களில் டிபன்டரான ஆா்ஜென்டீனா வீரா் எஸ்குயில் காரே கரானோவால் பாதிக்கப்பட்ட முதல் வீரா் ஆனாா்.

இந்நிலையில் மேலும் 5 போ் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனா்.

மொத்தம் 35 சதவீதம் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அணி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கரானோ வைரஸால், இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, ஜொ்மனி, பிரான்ஸ் நாடுகளில் பெரிய லீக் போட்டிகள் முழுவதும் நிலைகுலைந்து போயின. சாம்பியன்ஸ் லீக் , ஐரோப்பா லீக் போட்டிகளும் முடக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com