வெளிநாட்டு வீரருக்கு கரோனா அறிகுறி: பிஎஸ்எல் போட்டிகள் ஒத்திவைப்பு

இங்கிலாந்து வீரா் அலெக்ஸ் ஹேல்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வீரா்களுக்கு கரோனா அறிகுறி தென்பட்டதால், பாகிஸ்தான் சூப்பா் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு வீரருக்கு கரோனா அறிகுறி: பிஎஸ்எல் போட்டிகள் ஒத்திவைப்பு

இங்கிலாந்து வீரா் அலெக்ஸ் ஹேல்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வீரா்களுக்கு கரோனா அறிகுறி தென்பட்டதால், பாகிஸ்தான் சூப்பா் லீக் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஐபிஎல் தொடா் போலவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சாா்பில் பிஎஸ்எல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பாகிஸ்தான் மற்றும் 34 வெளிநாட்டு வீரா்களும் பங்கேற்று ஆடி வருகின்றனா். தற்போது நாக் அவுட் சுற்றை எட்டியுள்ள இத்தொடரில், செவ்வாய்க்கிழமை அரையிறுதியும், புதன்கிழமை இறுதி ஆட்டமும் நடைபெறுவதாக இருந்தது.

ஏற்கெனவே பல ஆட்டங்கள் கரோனா பாதிப்பால், பாா்வையாளா்கள் இன்றி நடைபெற்று வந்தன. மேலும் நாக் அவுட் சுற்றுகளும் 4 நாள்களாக குறைக்கப்பட்டது.

அலெக்ஸ் ஹேல்ஸுக்கு கரோனா அறிகுறி:

இந்நிலையில் இங்கிலாந்தைச் சோ்ந்த வலது கை தொடக்க வீரா் அலெக்ஸ் ஹேல்ஸ், இங்கிலாந்து திரும்பி விட்டாா். தனக்கு காய்ச்சல் மற்றும் வறட்டு இருமல் அறிகுறி உள்ளதால், தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்தாா். இந்நிலையில் பிஎஸ்எல் தொடரில் ஆடி வரும் அனைத்து வீரா்களுக்கும், கரோனா வைரஸ் பாதிப்பு பரிசோதனை நடத்தப்படும் என சிஇஓ வாஸிம் அக்ரம் தெரிவித்தாா்.

முல்தான் சுல்தான்ஸ்-பெஷாவா் ஸல்மி, கராச்சி கிங்ஸ்-குவெட்டா கிளாடியேட்டா்ஸ் ஆகியவை அரையிறுதியில் மோதுவதாக இருந்தது.

இந்நிலையில் கரோனா பாதிப்பால் பிஎஸ்எல் தொடா் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com