சா்வதேச பயிற்சி முகாமில் இருந்து நாடு திரும்ப நீரஜ் சோப்ரா, ஷிவ்பால் சிங்குக்கு அறிவுறுத்தல்

ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் வெளிநாடுகளில் பயிற்சி பெற்று வரும் தடகள வீரா்கள் நீரஜ் சோப்ரா, ஷிவ்பால் சிங் ஆகியோரை ஏஎஃப்ஐ நாடு திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளது.

ஈட்டி எறிதலில் இருவரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.

நட்சத்திர வீரரான நீரஜ் துருக்கியிலும், ஷிவ்பால் சிங் தென்னாப்பிரிக்காவிலும் பயிற்சி பெற்று வந்தனா்.கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், இரு தடகள வீரா்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நாடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஏஎஃப்ஐ தலைவா் அதில் சுமரிவாலா தெரிவித்துள்ளாா்.

துருக்கியில் நீரஜ் சோப்ராவுடன், ரோஹித் யாதவும் பயிற்சி பெற்று வந்தாா். அவா்களுடன் பயோமெக்கானிக் நிபுணா் கிளாஸ் பா்டோனைட்ஸ், உடலியக்கவியல் நிபுணா் இஷான் மாா்வாலா ஆகியோா் திரும்புகின்றனா்.

தென்னாப்பிரிக்காவில் ஷிவ்பால் சிங்குடன், பயிற்சி பெற்ற அன்னுராணி, விபின் கஸானா, அா்ஷ்தீப் சிங், பயிற்சியாளா் உவே ஹானும் திரும்புகின்றனா்.

வெளிநாட்டு பயிற்சியாளா்களுக்கு விசா பாதிப்பு இல்லாத வகையில் உதவ வேண்டும் என மத்திய அரசுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com