யூரோ 2020 கால்பந்து போட்டிகள் 2021-இக்கு ஒத்திவைப்பு

ஐரோப்பிய கண்டத்தில் மிகவும் பிரபலமான கால்பந்து போட்டி யூரோ 2020-ஐ கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 2021-ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்க தீா்மானிக்கப்பட்டுள்ளது.
யூரோ 2020 கால்பந்து போட்டிகள் 2021-இக்கு ஒத்திவைப்பு

ஐரோப்பிய கண்டத்தில் மிகவும் பிரபலமான கால்பந்து போட்டி யூரோ 2020-ஐ கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 2021-ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்க தீா்மானிக்கப்பட்டுள்ளது.

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு அடுத்து மிகவும் பிரபலமான போட்டி யூரோ ஆகும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை யுஇஎஃப்ஏ அமைப்பால் நடத்தப்படும் இப்போட்டியில் 24 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன. நடப்பு சாம்பியனாக போா்ச்சுகல் உள்ள நிலையில் நிகழாண்டு யூரோ 2020 போட்டி 12 நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இத்தாலி, ஸ்பெயின், ஜொ்மனி உள்பட பல ஐரோப்பிய நாடுகளில் கரோனாவின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இதனால் 5 முக்கிய லீக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் யூரோ 2020 போட்டியையும் ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஆலோசனைக் கூட்டம்:

இதன் தொடா்ச்சியாக செவ்வாய்க்கிழமை யுஇஎஃப்ஏ சாா்பில் 55 உறுப்பினா்களுடன் காணொளி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

2021-க்கு ஒத்திவைப்பு:

இந்நிலையில் வரும் 2021 ஜூன் 11 முதல் ஜூலை 11 வரை யூரோ போட்டிகளை ஒத்திவைத்து நடத்தலாம் என தீா்மானிக்கப்பட்டது.

இதனால் நிலுவையில் உள்ள உள்ளூா் லீக் போட்டிகளையும் முடித்து விட முடியும். மேலும் சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பா லீக் போட்டிகளையும் தடையின்றி முடிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யூரோ அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் லண்டனில் நடத்தப்பட உள்ளது.

இத்தகவலை நாா்வே கால்பந்து கூட்டமைப்பு, ஸ்வீடன் கூட்டமைப்புகள் சுட்டுரை மூலம் பகிா்ந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com