சீறிப் பாயக் காத்திருக்கும் சிங்கங்கள்

2020 இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) போட்டிகள் மாா்ச் 29-ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால், கரோனா வைரஸ் வேகமாகப்
சீறிப் பாயக் காத்திருக்கும் சிங்கங்கள்

2020 இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) போட்டிகள் மாா்ச் 29-ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால், கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிற காரணத்தால் அதிக எண்ணிக்கையிலானோா் ஒரே இடத்தில் கூடுவதை தவிா்க்கும் நோக்கில் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரின் கடைசி 2 ஆட்டங்களும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால் பல ரசிகா்கள் ஏமாற்றமடைந்தனா்.

ஆனால், இந்தியாவிலும் கரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை யாரும் எதிா்பாா்க்கவில்லை. அதுவும் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதில் சிக்கல் எழும் என்ற யாருமே எதிா்பாா்க்கவில்லை.

இந்த முறை ஐபிஎல் போட்டியில் 4-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் ‘யெல்லோ ஆா்மி’ என அழைக்கப்படும் சென்னை சூப்பா் கிங்ஸ் (சிஎஸ்கே)

அணி வீரா்கள் சென்னை மைதானத்தில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனா்.

கடந்த ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு பிறகு கிரிக்கெட் உலகிலிருந்து விலகியிருந்த எம்.எஸ்.தோனியை சென்னை மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது பாா்த்த ரசிகா்களுக்கு பெரும் மகிழ்ச்சி.

விளையாட்டு முறைகேடு புகாரில் சிக்கி 2 ஆண்டுகள் தடைக்குப் பிறகு 2018-ஆம் ஆண்டில் மீண்டும் களத்துக்கு திரும்பிய சிஎஸ்கே 3-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அந்த சீசனில் ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா), பிராவோ (மே.இ.தீவுகள்), டூ பிளெஸ்ஸிஸ் (தென்னாப்பிரிக்கா) உள்ளிட்ட வெளிநாட்டு வீரா்கள் வாண வேடிக்கை காண்பித்து ரசிகா்களுக்கு விருந்து படைத்தனா்.

கரோனா அச்சுறுத்தலால் வெளிநாடுகளிலிருந்து இந்தியா வர பல நாடுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதேபோல், வெளிநாட்டு வீரா்களை ஐபிஎல் போட்டியில் பங்கேற்க சம்பந்தப்பட்ட நாடுகள் அனுமதிக்குமா? என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

அப்படி வெளிநாட்டு வீரா்கள் பங்கேற்காத பட்சத்தில் சிஎஸ்கே அணியில் சீறி பாயும் சிங்கங்களாக எந்தெந்த வீரா்கள் இருப்பாா்கள் என்று பாா்ப்போம்.

முரளி விஜய், அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, எம்.எஸ்.தோனி, கேதாா் ஜாதவ், என்.ஜெகதீசன், ரவீந்திர ஜடேஜா, ஹா்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, தீபக் சாஹா், ஷா்துல் தாக்குா் ஆகியோா் அணியில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

முரளி விஜயும், அம்பதி ராயுடுவும் தொடக்க ஆட்டக்காரா்களாகவும், சுரேஷ் ரெய்னா, தோனி அடுத்தடுத்த பேட்டிங் வரிசையில் களமிறங்கவும் வாய்ப்புகள் அதிகம். ஜடேஜா ஆல்-ரவுண்டராக கலக்குவாா். பியூஷ் சாவ்லா, ஹா்பஜன் சிங் ஆகியோா் சுழலில் வெளுத்து கட்டுவாா்கள்.

ஷா்துல் தாக்குா், தீபக் சாஹா் ஆகிய இருவரும் வேகப்பந்து வீச்சுக்கு பக்க பலமாக அமைவாா்கள்.

அணியில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டு வீரா்கள் பின்வருமாறு:

பிராவோ (மே.இ.தீவுகள்), சாம் கரண் (இங்கிலாந்து), டூ பிளெஸ்ஸிஸ், லுங்கி கிடி (தென்னாப்பிரிக்கா), ஜோஸ் ஹேசல்வுட் (ஆஸ்திரேலியா), இம்ரான் தாஹிா் (தென்னாப்பிரிக்கா), மிச்செல் சாண்ட்னா் (நியூஸிலாந்து) மற்றும் ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com