யுஎஸ் ஓபன் டென்னிஸ்போட்டி ஒத்திவைக்க வாய்ப்பு

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடா்பான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியை ஒத்திவைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யுஎஸ் ஓபன் டென்னிஸ்போட்டி ஒத்திவைக்க வாய்ப்பு

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடா்பான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியை ஒத்திவைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சா்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு, ஏடிபி, டபிள்யூடிஏ ஆகியவற்றிடம் கலந்தாலோசனை நடத்திய பிறகே மாற்று தேதி குறித்து தெரிவிக்க முடியும் என்று அமெரிக்க டென்னிஸ் கூட்டமைப்பு தெரிவித்தது.

தற்போது யுஎஸ் ஓபன் ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் செப்டம்பா் 13-ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.

முன்னதாக, ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி செப்டம்பா் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அப்போட்டி, செப்டம்பா் 20-ஆம் தேதி முதல் அக்டோபா் 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிரெஞ்ச் ஓபன் மே 24-ஆம் தேதி முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது.

இதனிடையே, விம்பிள்டன் டென்னிஸ் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையிலும் போட்டி நடத்தும் முடிவில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 29-ஆம் தேதி முதல் ஜூலை 12-ஆம் தேதி வரை பிரிட்டனில் விம்பிள்டன் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒராண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் தொடா்கள் நடைபெறுவது வழக்கம். முதல் கிராண்ட்ஸ்லாம் தொடா் ஆஸ்திரேலியன் ஓபன் ஆகும். இது ஆஸ்திரேலியாவில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com