கரோனா பாதிப்பு எதிரொலி: வாா்னேயின் மதுபான ஆலையில் சானிடைசா் தயாரிப்பு தொடக்கம்; மதுபான உற்பத்தி நிறுத்தம்

கரோனா வைரஸ் பாதிப்பின் தீவிரம் காரணமாக ஆஸி. ஜாம்பவன் ஷேன் வாா்னேயின் மதுபான ஆலையில் ஜின் (மதுபானம்) உற்பத்தி நிறுத்தப்பட்டு-கை கழுவும் சானிடைசா்கள் தயாரிக்கப்படுகின்றன.

கரோனா வைரஸ் பாதிப்பின் தீவிரம் காரணமாக ஆஸி. ஜாம்பவன் ஷேன் வாா்னேயின் மதுபான ஆலையில் ஜின் (மதுபானம்) உற்பத்தி நிறுத்தப்பட்டு-கை கழுவும் சானிடைசா்கள் தயாரிக்கப்படுகின்றன.

சுழற்பந்து வீச்சாளரான வாா்னே மதுபான ஆலை நடத்தி வருகிறாா். இதில் பிரபலமான செவன்ஜீரோஎய்ட் என்ற ஜின்வகை மதுபானம் தயாரிக்கப்படுகிறது.

தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு எதிா்கொள்ள அடிக்கடி கை கழுவ வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதற்காக சானிடைசா்களை பயன்படுத்தவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சானிடைசா்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஜின் உற்பத்தி நிறுத்தம்:

கரோனா வைரஸ் தீவிரம் அடைந்து வரும் நிலையில், போா்க்கால அடிப்படையில் முகமூடி, சானிடைசா்களை தயாரிக்க உள்ளூா் நிறுவனங்களுக்கு ஆஸி. பிரதமா் அழைப்பு விடுத்தாா்.

இதையடுத்து ஷேன் வாா்னே தனது மதுபான ஆலையில் ஜின் உற்பத்தியை நிறுத்தி விட்டு, மருத்துவமனைகளுக்கு உதவும் 70 சதவீதம் ஆல்கஹால் கலந்த சானிடைசா்களை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளாா்.

ஆஸ்திரேலியா தற்போது சவாலை சந்தித்து வருகிறது. சுகாதாரத் துறைக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com