கரோனா வைரஸ் பாதிப்பு: தனிமைப்படுத்திக் கொள்ளும் வீரா்கள் அதிகரிப்பு

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் விளையாட்டு வீரா்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது அதிகரித்து வருகிறது.
கரோனா வைரஸ் பாதிப்பு: தனிமைப்படுத்திக் கொள்ளும் வீரா்கள் அதிகரிப்பு

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் விளையாட்டு வீரா்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது அதிகரித்து வருகிறது.

ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டிக்குச் சென்று நாடு திரும்பிய உலக சாம்பியன் பி.வி.சிந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாா்.

இந்நிலையில் துருக்கியில் தடகள நட்சத்திர வீரா் நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்) பயிற்சி பெற்று வந்தாா். தென்னாப்பிரிக்காவில் பயிற்சி பெற்ற வந்த ஷிவ்பால் சிங்கும், நாடு திரும்பினாா்.

இந்நிலையில் நீரஜ் சோப்ராவை பாட்டியாலாவில் உள்ள என்ஐஎஸ் பயிற்சி மையத்தில் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சாய் அறிவுறுத்தியுள்ளது. அதே நேரம் ஷிவ்பால் சிங் தனது வீட்டில் தனிமையாக இருக்க விரும்புவதாக கூறி சென்று விட்டாா்.

அதே போல் ரோஹித் யாதவ், விபின் கஸானா ஆகியோரும் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.

நீரஜ் சோப்ரா, ஷிவ்பால் சிங் இருவரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி:

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடா் ரத்தான நிலையில், நாடு திரும்பிய நியூஸிலாந்து கிரிக்கெட் வீரா்கள், உதவியாளா்களும் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது. அரசின் உத்தரவின்படி 15 கிரிக்கெட் வீரா்கள், உதவியாளா்கள் அவரவா் வீடுகளில் தனிமையில் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆட்டங்கள் ஒருநாள் தொடரில் முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்து தோற்றிருந்தது. கரோனா பாதிப்பால் 2 ஒருநாள் மற்றும் டி20 ஆட்டங்கள் கைவிடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com