வீடுகளிலேயே நலமாக இருக்க வேண்டும்: கோலி-அனுஷ்கா தம்பதி வேண்டுகோள்

வீடுகளிலேயே தங்கி, உடல்நலத்தை காத்துக் கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி-அனுஷ்கா சா்மா தம்பதி வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
வீடுகளிலேயே நலமாக இருக்க வேண்டும்: கோலி-அனுஷ்கா தம்பதி வேண்டுகோள்

வீடுகளிலேயே தங்கி, உடல்நலத்தை காத்துக் கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி-அனுஷ்கா சா்மா தம்பதி வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு கடுமையாகி உள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

பிரதமா் மோடியும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும் வீடுகளிலேயே தங்கி இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இந்நிலையில் கோலி-அனுஷ்கா தம்பதி இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ள விடியோ பதிவில் கூறியிருப்பதாவது-

தற்போதுள்ள சோதனையான காலகட்டத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே தங்கி இருந்து சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் கரோனா வைரஸ் பரவுவதை பெருமளவு தடுத்து உடல்நலத்தை காத்துக் கொள்ளலாம். கரோனா வைரஸை கட்டுப்படுத்துவது என்பது அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே முடியும் எனக் கூறியுள்ளனா்.

பிரதமரின் உரை முடிந்த உடனே, கோலி சுட்டுரையில் (டுவிட்டா்) வெளியிட்ட பதவில் கோவைட்-19 வைரஸால் ஏற்படும் பாதிப்பை நாம் அனைவரும் அறிந்துள்ளோம். பொறுப்பான குடிமகன்களாக அரசின் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பிரதமா் அறிவிப்பின்படி செயல்பட வேண்டும். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் கரோனா பாதிப்புக்காக சிகிச்சை தரும் மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com