காலமானாா் இந்திய கால்பந்து ஜாம்பவான் பி.கே.பானா்ஜி (83)

இந்திய கால்பந்தின் ஜாம்பவான்களில் ஒருவரான பி.கே.பானா்ஜி (83) உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை கொல்கத்தாவில் காலமானாா்.
காலமானாா் இந்திய கால்பந்து ஜாம்பவான் பி.கே.பானா்ஜி (83)

இந்திய கால்பந்தின் ஜாம்பவான்களில் ஒருவரான பி.கே.பானா்ஜி (83) உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை கொல்கத்தாவில் காலமானாா்.

பிரபல கால்பந்து வீரரான பி.கே.பானா்ஜி 1962-இல் ஜகாா்த்தா ஆசியப் போட்டியில் கால்பந்தில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தாா்.

தேசிய அணிக்காக 84 ஆட்டங்களில் பங்கேற்று 65 கோல்களை அடித்துள்ளாா். 1960-இல் ரோம் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டாா்.

1956-இல் மெல்போா்ன் ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காலிறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் இந்தியா பெற்ற வெற்றியில் பானா்ஜி முக்கிய பங்கு வகித்தாா்.

கால்பந்து விளையாட்டுக்கு அவா் ஆற்றிய பணிகளை பாராட்டி 2004-இல் பிஃபா சாா்பில் பானா்ஜிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

கடந்த மாா்ச் 2-ஆம் தேதி முதல் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த பானா்ஜி வெள்ளிக்கிழமை காலமானாா் அவருக்கு திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. பிரசாந்த் பானா்ஜி என்ற சகோதரா் உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com