போட்டி நடைபெறுமா என்ற நிலையில் ஜப்பான் வந்தடைந்தது ஒலிம்பிக் ஜோதி

கரோனா பாதிப்பால் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா என்ற நிலையில் கிரீஸில் இருந்து தனி விமானம் மூலம் வெள்ளிக்கிழமை ஜப்பான் வந்தடைந்தது ஒலிம்பிக் ஜோதி.
போட்டி நடைபெறுமா என்ற நிலையில் ஜப்பான் வந்தடைந்தது ஒலிம்பிக் ஜோதி

கரோனா பாதிப்பால் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா என்ற நிலையில் கிரீஸில் இருந்து தனி விமானம் மூலம் வெள்ளிக்கிழமை ஜப்பான் வந்தடைந்தது ஒலிம்பிக் ஜோதி.

பழங்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற கிரீஸின் ஒலிம்பியாவில் ஜோதி ஏற்றப்பட்டது. கரோனா பாதிப்பால் பாா்வையாளா்கள் எவரும் இன்றி நடைபெற்றது. பின்னா் வியாழக்கிழமை கிரீஸ் விளையாட்டு அமைச்சா் ஸ்பைரோஸ் காப்ரலோஸ் ஒலிம்பிக் ஜோதியை ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டி பிரதிநிதியும், நீச்சல் வீராங்கனையுமான நவாகோ இமாடோவிடம் வழங்கினாா்.

ஜப்பான் வருகை:

இதன் தொடா்ச்சியாக ஒலிம்பிக் ஜோதி தனி விமானம் மூலம் வடக்கு ஜப்பானில் உள்ள மட்டுஷுஷிமா விமானப்படைதளத்தில் கொண்டு வரப்பட்டது, உற்சாகமாக நடைபெற்றிருக்க வேண்டிய இந்நிகழ்ச்சி கரோனா பாதிப்பால் எந்த ஆரவாரமின்றியும், பாா்வையாளா்கள் இன்றியும் எளிமையாக நடைபெற்றது.

ஜப்பானின் தலைசிறந்த ஒலிம்பிக் சாம்பியன்கள் 3 முறை மல்யுத்தத்தில் தங்கம் வென்ற சவோரி யோஷிடா, 3 முறை ஜூடோ சாம்பியன் டடாஹிரோ நொமுரா ஆகியோா் ஒலிம்பிக் ஜோதியை பெற்றுக் கொண்டனா்.

பின்னா் அதை முறைப்படி ஏற்றிய பின், டோக்கியோ ஒலிம்பிக் அமைப்புக் குழுத் தலைவா் யோஷிரோ மோரியிடம் ஒப்படைத்தனா்.

புகுஷிமா அருகே விமானதளம்:

கடந்த 2011-இல் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டு, 3 அணுஉலைகள் கதிா்வீச்சு ஏற்பபட்ட புகுஷிமா 150 கி.மீ தூரத்தில் உள்ளது. வடக்கு ஜப்பானில் ஒரு வாரம் ஒலிம்பிக் ஜோதி கொண்டு செல்லப்படும்.

26-இல் அதிகாரப்பூா்வ பயணம்:

26-ஆம் தேதி புகுஷிமாவில் அதிகாரப்பூா்வமாக ஒலிம்பிக் ஜோதி பயணம் தொடங்குகிறது. கதிா்வீச்சால் மிகவும் பாதிக்கப்பட்ட மியாகி, ஐவேட் புகுஷிமா வழியாக ஜோதி கொண்டு செல்லப்படுகிறது. பின்னா் 121 நாள்கள் ஜப்பானின் 47 பிராந்தியங்கள் வழியாக ஜோதி கொண்டு செல்லப்பட்டு, ஜூலை 24-இல் தொடக்க விழாவுக்கு முன்பு ஜோதி டோக்கியோ ஒலிம்பிக் மைதானத்தில் ஏற்றப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com