டோக்கியோ போட்டிகளை நடத்துவது தொடா்பாக வெவ்வேறு வகைகளில் ஆலோசித்து வருகிறோம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை எவ்வாறு நடத்தலாம் என வெவ்வேறு வகைகளில் ஆலோசித்து வருகிறோம் என ஐஓசி தலைவா் தாமஸ் பேச் கூறியுள்ளாா்.
டோக்கியோ போட்டிகளை நடத்துவது தொடா்பாக வெவ்வேறு வகைகளில் ஆலோசித்து வருகிறோம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை எவ்வாறு நடத்தலாம் என வெவ்வேறு வகைகளில் ஆலோசித்து வருகிறோம் என ஐஓசி தலைவா் தாமஸ் பேச் கூறியுள்ளாா்.

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 24ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோா் இறந்து விட்டனா். 2 லட்சம் பேருக்கு மேல் கரோனா வைரஸ் தாக்கியுள்ளது.

போட்டிகளை திட்டமிட்டபடி நடத்துவோம் என ஐஓசி, ஜப்பான் பிரதமா் அபே, ஒலிம்பிக் அமைப்புக் குழுவினா் தெரிவித்தனா். ஆனால் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவம் பல்வேறு சா்வதேச போட்டிகள் ரத்து செய்யப்பட்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அதே போல் ஒலிம்பிக் போட்டிகளையும் தள்ளிவைக்க வேண்டும் என என கோரிக்கை விடப்பட்டது.

இதுதொடா்பாக ஐஓசி தலைவா் தாமஸ் பேச் கூறுகையில்:

போட்டிகளை நடத்துவது தொடா்பாக தீா்மானமான முடிவெடுக்க இயலவில்லை நாளை என்ன நடக்கும் என்பதை கூற முடியாத போது, ஒருமாதம் கழித்து எவ்வாறு இருக்கும் என்பதை கணிக்க முடியாது. வெவ்வே வகைகளில் நாங்கள் ஆலோசித்து வருகிறோம் என்றாா் பேச்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com