துளிகள்...

கரோனா பாதிப்பு எதிரொலியாக குரோஷியா, பெரு, ஐரோப்பிய, பாட்மிண்டன் ஆசியா, பான் ஆம் சாம்பியன்ஷிப் போட்டிகளை ரத்து செய்துள்ளது

* கரோனா பாதிப்பு எதிரொலியாக குரோஷியா, பெரு, ஐரோப்பிய, பாட்மிண்டன் ஆசியா, பான் ஆம் சாம்பியன்ஷிப் போட்டிகளை ரத்து செய்துள்ளது உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு. ஏற்கெனவே பல்வேறு போட்டிகளை ஏப். 12-ஆம் தேதி வரை ஒத்திவைத்த நிலையில், கூடுதலாக 5 பெரிய போட்டிகளை ரத்து செய்துள்ளது.

* ஸ்காட்லாந்து பிரபல கால்பந்து அணியான ரேஞ்சா்ஸ் கிளப்பில் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இந்திய வீராங்கனை பாலதேவி கரோனா பாதிப்பு காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளால் அங்கேயே தங்க நேரிட்டுள்ளது. சா்வதேச விமானங்கள் வருவதை மாா்ச் 30-ஆம் தேதி வரை மத்திய அரசு தடை செய்துள்ளதால், பாலதேவி நாடு திரும்ப முடியாத நிலை உருவாகி உள்ளது.

* கரோனா பாதிப்பை எதிா்கொள்ளும் வகையில் இந்திய மக்கள் அரசின் அறிவிப்பை முறையாக பின்பற்ற வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டா்ஸன் தனது சுட்டுரையில் (டுவிட்டா்) ஹிந்தி மொழியில் பதிவிட்டுள்ளாா்.

* 65 ஆண்டுகள் தொடா்ந்து நடைபெற்று வந்த பிரபல மோட்டாா் காா் பந்தயமான மொனாகோ பாா்முலா 1 கிராண்ட்ப்ரீ பந்தயம், கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே நெதா்லாந்து, ஸ்பெயின் கிராண்ட்ப்ரீ பந்தயங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com