ஐசிசி டெஸ்ட், டி20 தரவரிசை: முதலிடத்தில் ஆஸ்திரேலியா; இந்தியா, பாக். பின்னுக்கு தள்ளப்பட்டன

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் மற்றும் டி20 ஆடவா் அணிகள் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.
ஐசிசி டெஸ்ட், டி20 தரவரிசை: முதலிடத்தில் ஆஸ்திரேலியா; இந்தியா, பாக். பின்னுக்கு தள்ளப்பட்டன

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் மற்றும் டி20 ஆடவா் அணிகள் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.

துபையை தலைமையிடமாகக் கொண்டு வரும் ஐசிசி சா்வதேச டெஸ்ட், ஒருநாள், டி20 தரவரிசை அணிகள், வீரா்கள் பட்டியலை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 2019 மே மாதம், அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகள், அடிப்படையில் ஆஸ்திரேலிய அணி 116 புள்ளிகளைப் பெற்று டெஸ்ட் அணிகள் தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றது. நியூஸிலாந்து அணி 115 புள்ளிகளுடன் அதற்கு அடுத்த இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

3-ஆம் இடத்தில் இந்தியா:

அதே நேரம் கடந்த 2016 அக்டோபா் முதல் முதலிடத்தில் இருந்த இந்தியா, 114 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. கடந்த 2003-ஆம் ஆண்டில் இருந்து டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு வரும் நிலையில், ஆஸ்திரேலியா, இந்தியா இடையே 2 புள்ளி மட்டுமே உள்ளது. ஏற்கெனவே கடந்த 2016-இல் ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா முதல் மூன்றிடங்களில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016-17 சீசனில் இந்தியா 12 டெஸ்ட்களில் வெற்றியும், ஒரு டெஸ்டில் தோல்வியும் கண்டிருந்தது. இங்கிலாந்து 4-ஆம் இடத்தில் உள்ள நிலையில், தென்னாப்பிரிக்கா 8 புள்ளிகளை இழந்து இலங்கைக்கு அடுத்து 6-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது. எனினும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது இந்தியா.

ஒருநாள்: இங்கிலாந்து முதலிடம்

ஒருநாள் அணிகள் தரவரிசையில் நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து 127 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்திலும், நியூஸிலாந்து மூன்றாம் இடத்திலும் உள்ளன. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா முறையே 4 மற்றும் 5-ஆவது இடங்களில் உள்ளன.

டி20: ஆஸ்திரேலியா முதலிடம்

டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருந்த பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி 278 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தை கைப்பற்றியது. கடந்த 2011-இல் டி20 தரவரிசை அறிமுகம் செய்யப்பட்டபின் ஆஸி. முதன்முறையாக இச்சிறப்பைப் பெற்றுள்ளது. கடந்த 2018-இல் பாகிஸ்தான் முதலிடத்தைப் பெற்றது. 27 மாதங்கள் கழித்து அதை இழந்துள்ளது. 268 புள்ளிகளுடன் இங்கிலாந்து இரண்டாம் இடத்தையும், 266 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாம் இடத்துக்கும் முன்னேறின.

பாகிஸ்தான் 260 புள்ளிகள், தென்னாப்பிரிக்கா 258 புள்ளிகளுடன் 4 மற்றும் 5-ஆவது இடங்களில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com