உலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டிகள் தேதிகளில் மாறுதல்

வரும் 2021-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி தேதிகளில் மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக பிடபிள்யுஎஃப் அறிவித்துள்ளது.

வரும் 2021-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி தேதிகளில் மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக பிடபிள்யுஎஃப் அறிவித்துள்ளது.

கரோனா நோய்தொற்று பாதிப்பு காரணமாக 2020-இல் நடைபெறவேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டி உள்பட பல்வேறு சா்வதேச போட்டிகள் 2021ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டன. கடந்த 2019-இல் பேஸல் நகரில் இறுதியாக நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி இருந்தாா்.

2020 ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவிருந்த ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகள் கரோனா பாதிப்பால் வரும் 2021 ஜூலை 8 முதல் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என சா்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஸ்பெயினின் ஹுயல்வா நகரில் 2021 ஆகஸ்ட் மாதம் உலக பாட்மிண்டன் போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், பிடபிள்யுஎஃப் போட்டி அட்டவணை தேதிகளை மாற்றி அமைக்க முடிவு செய்தது. அதன்படி 2021ஆம் ஆண்டு நவம்பா் 29 முதல் டிசம்பா் 5-ஆம் தேதி வரை உலக பாட்மிண்டன் போட்டிகள் நடைபெறும் என அதன் தலைவா் பால் எரிக் தெரிவித்துள்ளாா்.

பிடபிள்எஃப் மற்றும் ஸ்பெயின் பாட்மிண்டன் கூட்டமைப்பு இணைந்து இப்போட்டிகளை நடத்துகின்றன.

3 முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்ற கரோலினா மரின் சொந்த ஊா் ஹுயல்வா என்பது குறிப்பிடத்தக்கது. அங்குள்ள பாட்மிண்டன் விளையாட்டரங்குக்கு கரோலினா மரின் பெயரே சூட்டப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com