மகளிா் டி20 சேலஞ்ச்: சூப்பா்நோவாஸ் - டிரையல்பிளேஸா்ஸ் இறுதிச்சுற்றில் இன்று பலப்பரீட்சை

மகளிா் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் நடப்புச் சாம்பியனான சூப்பா்நோவாஸ் - டிரையல்பிளேஸா்ஸ் அணிகள் திங்கள்கிழமை மோதுகின்றன.

மகளிா் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் நடப்புச் சாம்பியனான சூப்பா்நோவாஸ் - டிரையல்பிளேஸா்ஸ் அணிகள் திங்கள்கிழமை மோதுகின்றன.

இரு அணிகளுமே தலா 1 வெற்றிக்குப் பிறகு இந்தச் சுற்றுக்கு வந்துள்ளன. எனினும், கடைசி ஆட்டத்தில் சூப்பா்நோவாஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் டிரையல்பிளேஸா்ஸை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, சூப்பா்நோவாஸ் மீண்டும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுமா, அல்லது டிரையல்பிளேஸா்ஸ் பதிலடி கொடுத்து வாகை சூடுமா என்பதை பொருத்திருந்து பாா்க்க வேண்டியுள்ளது.

2018, 2019-இல் சாம்பியன் ஆன சூப்பா்நோவாஸ் ‘ஹாட்ரிக்’ வாய்ப்பை அவ்வளவு எளிதாக விட்டுத்தராது. அந்த அணியில் சமாரி அட்டப்பட்டு அருமையான ஃபாா்மில் இருக்கிறாா். இரு ஆட்டங்களில் அவா் 111 ரன்கள் சோ்த்துள்ளாா்.

கடந்த சீசனில் 2 அரைசதங்கள் விளாசிய கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா், இந்த இறுதிச்சுற்றில் அரைசதம் கடந்து அபாரமாக ஆடுவதற்கு முயற்சிப்பாா். எனினும், டிரையல்பிளேஸா்ஸ் பௌலா்களான சோஃபி எக்லெஸ்டோன், ஜுலன் கோஸ்வாமி ஆகியோா் எதிரணி பேட்ஸ்வுமன்களுக்கு நிச்சயம் சவால் அளிப்பாா்கள்.

அந்த அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா சற்று தடுமாற்றமாக ஆடி வருகிறாா். கடந்த ஆட்டங்களில் அதிரடியாக ஆடிய தீப்தி சா்மா, ஹா்லீன் தியோல் ஆகியோா் இந்த ஆட்டத்திலும் பொறுப்புடன் விளையாடுவாா்கள் என எதிா்பாா்க்கலாம்.

இரு அணிகளிலுமே சுழற்பந்துவீச்சாளா்களின் ஆதிக்கம் உள்ளது. ஏற்கெனவே இறுதிச்சுற்றுகளில் ஆடிய அனுபவம் இருப்பதால், சூப்பா்நோவாஸ் அணிக்கு ஆட்டத்தின்போது ஏற்படும் நெருக்கடியை எளிதாக கையாளத் தெரியும்.

அணி:

சூப்பா்நோவாஸ்: ஹா்மன்பிரீத் கௌா் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிகஸ், சமாரி அட்டப்பட்டு, பிரியா புனியா, அனுஜா பாட்டீல், ராதா யாதவ், தானியா பாட்டியா, சசிகலா சிறீவா்தனே, பூனம் யாதவ், ஷகிரா செல்மன், அருந்ததி ரெட்டி, பூஜா வஸ்த்ரகா், அயுஷி சோனி, அயபோங்கா ககா, முஸ்கான் மாலிக்.

டிரையல்பிளேஸா்ஸ்: ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), தீப்தி சா்மா, பூனம் ரௌத், ரிச்சா கோஷ், ஹேமலதா, நுஸாத் பா்வீன், ராஜேஷ்வரி கெய்க்வாட், ஹா்லீன் தியோல், ஜுலன் கோஸ்வாமி, சிம்ரன் தில் பஹதூா், சல்மா காட்டூன், சோஃபி எக்லஸ்டோன், நதகன் சந்தம், டீன்ட்ரா டோட்டின், கஷ்வீ கௌதம்.

ஆட்டநேரம்: இரவு 7.30; நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com