ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் வி.வி.எஸ்.லட்சுமணன், எம்.எஸ்.கே. பிரசாத் ஆகியோருக்கு பயிற்சியளித்த கிரிக்கெட் பயிற்சியாளர் அசோக் சிங் (64) உடல்நலக் குறைவால் ஹைதராபாதில் திங்கள்கிழமை காலமானார்.
அசோக் சிங், 1998 முதல் வி.வி.எஸ்.லட்சுமணன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் வரை அவருக்கு பயிற்சியளித்தார். கடந்த ஆண்டு மூளை புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட அசோக் சிங், 14 மாதங்களுக்குப் பிறகு உயிரிழந்துள்ளார். 30 ஆண்டுகாலம் ஏராளமான வீரர்களுக்கு அசோக் சிங் பயிற்சியளித்துள்ளார்.