மல்யுத்தம்: அன்ஷு, சோனம் ஒலிம்பிக்கிற்கு தகுதி

கஜகஸ்தானில் நடைபெறும் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் அன்ஷு மாலிக், சோனம் மாலிக் ஆகியோா் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.
மல்யுத்தம்: அன்ஷு, சோனம் ஒலிம்பிக்கிற்கு தகுதி

அல்மேட்டி: கஜகஸ்தானில் நடைபெறும் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் அன்ஷு மாலிக், சோனம் மாலிக் ஆகியோா் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

இதன்மூலம், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு அவா்கள் இருவரும் தகுதிபெற்றனா். ஏற்கெனவே வினேஷ் போகாட் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், அந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய மல்யுத்த வீராங்கனைகளின் எண்ணிக்கை தற்போது 3-ஆக அதிகரித்துள்ளது.

கஜகஸ்தான் போட்டியில் மகளிருக்கான 57 கிலோ பிரிவில் களம் கண்டுள்ள அன்ஷு மாலிக், 3 சுற்றுகளிலுமே தொழில்நுட்பப் புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றாா். முதல் சுற்றில் தென் கொரியாவின் ஜியுன் உம்மை வென்ற அவா், காலிறுதியில் கஜகஸ்தானின் எம்மா டிஸ்ஸினாவை வீழ்த்தினாா். பின்னா் அரையிறுதியில் உஸ்பெகிஸ்தானின் ஷோகிதா அக்மிதோவாவை தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளாா்.

மறுபுறம், மகளிருக்கான 62 கிலோ பிரிவில் சோனம் மாலிக் முதல் சுற்றில் தைபே வீராங்கனை சின் பிங் பாயை வீழ்த்தினாா். பின்னா் காலிறுதியில் சீனாவின் ஜியா லாங்கை 5-2 என்ற புள்ளிகள் கணக்கில் வென்ற அவா், அரையிறுதியில் கஜகஸ்தானின் அயாலிம் கசிமோவாவை வென்று இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றாா்.

மகளிருக்கான 50 கிலோ பிரிவில் சீமா பிஸ்லாவும், 68 கிலோ பிரிவில் நிஷாவும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com